உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
88 பார்வைகள்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பல வருடங்களாக தமது காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த 65 குடும்பங்களுக்கு இன்றையதினம் புதன்கிழமை (28) மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து காணி உறுதிப்பத்திரங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது மன்னார் மாவட்டத்தில் பல வருடங்களாக தமது காணிகளுக்கான ஆவணங்கள் இல்லாத நிலையில் காணப்பட்ட மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் வசித்து வந்த 65 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களாக காதர் மஸ்தான், ஜெகதீஸ்வரன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் நகர சபையின் தவிசாளர், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் இணைந்து குறித்த பத்திரங்களை மக்களுக்கு வழங்கி வைத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஆபத்தான நிலையில் புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலம் – உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை!

யாழ்ப்பாணக் குடாநாட்டையும் தீவகப் பகுதிகளையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்து மார்க்கமான புங்குடுதீவு வாணர் தாம்போதி கடற்பாலம், நிரந்தர புனரமைப்பின்றி இருப்பதுடன், அதன் இரு கரைகளும் பாதுகாப்பு கற்களோ…

86 0 0
இலங்கை செய்திகள்

நிந்தவூரில் கோழி இறைச்சியின் விலையைக் காட்சிப்படுத்துவது கட்டாயம்!

நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின் விலையை நாளை முதல் நுகர்வோருக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என நிந்தவூர்…

69 0 0
இலங்கை செய்திகள்

அட்டாளைச்சேனையில் காட்டு யானைகள் அட்டகாசம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் அச்சுறுத்தல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்டம் பகுதியில் நேற்றிரவு (27) உட்புகுந்த காட்டு யானைகள், பயன்தரக்கூடிய 20 தென்னை மரங்களை பிடுங்கி அழித்து நாசப்படுத்தியுள்ளதுடன், நெல் களஞ்சிய…

72 0 0
இலங்கை செய்திகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கைது.!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா, இலஞ்ச, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.…

82 0 0