உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வர்த்தக நிலையத்தில் திருட்டு; சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
80 பார்வைகள்

தலவாக்கலை நகரில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசிகள், பாதுகாப்புக் கமரா கட்டமைப்புகளை விற்பனை மற்றும் பொருத்தும் வர்த்தக நிலையத்திற்குள் கடந்த 25ஆம் திகதி இரவு நுழைந்த நபரொருவர், அங்கிருந்த கையடக்கத் தொலைபேசிகள், பணம் மற்றும் தங்க மோதிரம் ஒன்றைத் திருடிச் சென்றுள்ளார்.

திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தின் மொத்த பெறுமதி ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி பாதுகாப்புக் கமரா கட்டமைப்பில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

இந்தக் காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்குப் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டுள்ள போதிலும், சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிசிரிவி காட்சிகளில் காணப்படும் நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது அவரை அடையாளம் காணக்கூடியவர்கள், உடனடியாகத் தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கைது.!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா, இலஞ்ச, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.…

76 0 0
இலங்கை செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக 50 அம்சப் பிரேரணை; விவாதத்தைத் தவிர்க்க அரசு முயற்சி.!

தேசிய மக்கள் சக்தி அரசின் சபாநாயகருக்கு எதிராக, அரச சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் ரீதியில் கையாளுதல் உள்ளிட்ட 50 அம்சங்களைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று…

69 0 0
இலங்கை செய்திகள்

எதிராளிகளை முடக்கப் பார்க்கும் அநுர அரசு.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அல்லாமல், தமது அரசியல் எதிராளிகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடக்கி வைப்பதற்கே நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று…

75 0 0
இலங்கை செய்திகள்

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு.!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பல வருடங்களாக தமது காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த 65 குடும்பங்களுக்கு இன்றையதினம் புதன்கிழமை (28) மன்னார் மாவட்டச்…

79 0 0