உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் தமிழரசு, சங்குக் கூட்டணித் தலைவர்கள் விசேட கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
98 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்ற விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிச் கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்திலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் இரு தரப்பிலிருந்தும் முக்கிய அரசியல் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் சி.வி.கே. சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், சி. வேந்தன் மற்றும் நா. இரட்ணலிங்கம் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

நாட்டின் தற்போதைய சமகால அரசியல் நிலவரங்கள், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன என்று சந்திப்பின் பின்னர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒருவர் உ**யிரிழப்பு.!

மொனராகலை – வெதிகும்புர வீதியில் இன்று (28) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. மொனராகலையிலிருந்து வெதிகும்புர நோக்கிப் பயணித்த…

68 0 0
இலங்கை செய்திகள்

அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு.!

2026 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி தேசிய வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (27)…

65 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு – சங்கு ஒரே கட்சியாக இயங்க தீர்மானம்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய இரு தரப்புகளும் உள்ளூராட்சி சபைகளின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஒரே கட்சியைப்…

75 0 0
இலங்கை செய்திகள்

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது.!

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஆண் ஒருவரும்…

91 0 0