உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிறைத்தண்டனை பெறுகின்ற பிக்குகளின் காவியுடை விவகாரத்துக்கு தீர்வு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
124 பார்வைகள்

நீதிமன்றத் தீர்ப்புக்கு அமையச் சிறைத்தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகளின் காவியுடை விவகாரம் தொடர்பில் சிறைச்சாலைச் சுற்றறிக்கைக்கு அமைவாக உரிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“சிறைத்தண்டனை பெறுகின்ற பிக்குகளின் காவியுடை குறித்துச் சுற்றறிக்கையின் பிரகாரமே தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஞானசார தேரரின் விவகாரத்தை ஒருசில ஊடகங்களே பெரிதுபடுத்தி வருகின்றன.

புதிதாகச் சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதோ அல்லது கைதுகளைத் தீவிரப்படுத்துவதோ அரசின் நோக்கமல்ல. அதேவேளை, சிறைச்சாலைகளில் நெரிசல் காணப்படுகின்றது என்பதற்காகக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யாமல் இருக்கவும் முடியாது.

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு அறிக்கைகள் நீதிமன்றத்துக்கு உடனடியாகச் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

இதன் பயனாக, கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் மட்டும் சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், சிறைச்சாலை நெரிசலுக்குத் தொழில்நுட்ப அடிப்படையில் தீர்வு காண்பதற்குத் துறைசார் தரப்பினரின் ஒத்துழைப்புகளும் பெறப்பட்டு வருகின்றன.

மக்களின் போராட்டங்களை முடக்கும் நோக்கம் அரசுக்கு எப்போதுமே கிடையாது. நாட்டில் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபடும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், அந்தப் போராட்டங்கள் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படக் கூடாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

145 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

135 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

129 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

129 0 0