உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
28 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கரூரில் குறிவைக்கப்பட்ட விஜய் – முக்கிய நபருக்கு வலைவீச்சு

இந்திய செய்திகள் 4 மணி நேரம் முன்
84 பார்வைகள்

தமிழகத்தில் தனியார் பாடசாலை நிர்வாகிகளுக்கு அரச அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் சூழலில், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வேலூர் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் டிட்டா சரவணன் என்பவர் மீதே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, “கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?” என டிட்டா சரவணன் கேள்வி எழுப்பிய காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்தக் கருத்து தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், டிட்டா சரவணனிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

அருணாச்சல பிரதேச எல்லையில் தொடரும் பதற்றம்!

இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில், சீன இராணுவத்தினருடன் இந்தியப் படையினர் தொடர்ந்து பல்வேறு மோதல் நிலைகளை எதிர்கொண்டு வருவதாக, இந்திய- திபெத் எல்லைக் காவல் படையின் தலைமை…

84 0 0
இந்திய செய்திகள்

புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிலைக்கு இந்தியா முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்

21ஆம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் தனித்துவமான நிலைக்கு இந்தியா முன்னேறியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய சவால்களுக்கு உறுதியான தீர்வுகளை வழங்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை…

83 0 0
இந்திய செய்திகள்

தமிழக சிறையில் பரபரப்பு – 17 கைதிகள் தப்பியோட்டம்!

தமிழ்நாட்டின் தேனி கிளைச் சிறையில் திங்கள்கிழமை (26) நள்ளிரவில் கைதி ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரது அறைக்குள் சென்ற சிறை ஊழியர்களைத் தாக்கிவிட்டு, 17…

105 0 0
இந்திய செய்திகள்

கரூரிலேயே அவனை முடித்திருந்தால்..!! அன்பில் மகேஷ் ஆதரவாளர்களின் கருத்தால் சர்ச்சை!

தமிழ் நாட்டின் தனியார் பாடசாலை நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்…

100 0 0