கிளிநொச்சியில் நடைபெற்ற ‘பிரஜாசக்தி’ தேசிய வேலைத்திட்டம்.!
பிரஜாசக்தி தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் கிளிநொச்சி தனியார் விருந்தகத்தில் இன்று 28.10.2026 நடைபெற்றது
வறுமையை வெல்வோம்; வளமான கிராமங்களை உருவாக்குவோம்; மக்களின் சக்தியால் நாட்டைக் கட்டியெழுப்புவோம்!” என்ற உயரிய நோக்குடன் முன்னெடுக்கப்படும் பிரஜாசக்தி தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் இன்றைய விழிப்புணர்வு.
வறுமை என்பது வெறுமனே பொருளாதாரப் பற்றாக்குறை மட்டுமல்ல; அது வாய்ப்புகள், வளங்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான அணுகல் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு சவாலுமாகும். இச்சவாலை ஒன்றிணைந்து எதிர்கொண்டு, மக்களின் பங்கேற்புடன் நிலையான கிராமிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இத்தகைய வேலைத்திட்டங்களின் முக்கியத்துவமாகும்.
இதன்போது, கிராமிய மக்களை வலுவூட்டுகின்ற தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பில் வடமாகாண சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் உப்பாளி பன்னில பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள், கிளிநொச்சி கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் மருங்கன் மோகன், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமூக சக்தி தலைவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
பிரஜா சக்தி(Praja Shakthi) தேசிய மேம்பாட்டுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக நடைமுறைகள்:-
நிர்வாகப் பொறுப்பு
பிரஜா சக்தி திட்டத்தின் கீழ் மூலதனப் பிரதிவாதங்களை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் (குறிப்பாக மாவட்டச் செயலகத்தின் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேசச் செயலாளர்கள்) தலைமையிலான மாவட்ட மற்றும் பிரதேச உத்தியோகத்தர்கள் மூலமே செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிதியொதுக்கீட்டு விவரங்கள்
2026 ஆம் ஆண்டில் பிரஜா சக்தி திட்டத்திற்காக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ரூபாய் 324 கோடியும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு ரூபாய் 324 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூடுதல் ஒதுக்கீடுகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 363 கிராமங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 325 கிராமங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிராமிய தொழில்முயற்சி மற்றும் கிராம அபிவிருத்திக்காக மேலதிக மில்லியன் கணக்கான ரூபாய்களும் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நோக்கம்
கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும் மற்றும் இந்த நிதியைத் திறம்படப் பயன்படுத்தி கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கொண்டுவருவதுமே மாவட்ட நிர்வாகத்தின் முக்கியப் பொறுப்பாகும் என குறிப்பிட்டார்.






