உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘அர்னாப்’ புயலின் தாக்கத்தால் கொந்தளிக்கும் கடற்பரப்பு! : வடக்கு, கிழக்குக்குக் எச்சரிக்கை!!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
114 பார்வைகள்

    அரபிக்கடலில் இருந்து நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழ்நாட்டின் ஊடாக வங்காள விரிகுடாக் கடலுக்குள் நுழையத் தொடங்கியுள்ளது என்றும், இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியும் புவியியல் மற்றும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் அவர் வெளியிட்டுள்ள விசேட வானிலை அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சுழற்சியானது இன்று திங்கட்கிழமை அதிகாலை தென்கிழக்கு திசை நோக்கி நகர்ந்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவுக் கடற்பகுதியூடாகத் திருகோணமலைக் கடற்கரையை அண்மித்து, பின்னர் மீள வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தனித்த ஒரு நிகழ்வாக ‘அர்னாப்’ புயலைப் பின்தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    வங்காள விரிகுடாவின் சூறாவளி வரலாற்றில் இவ்வாறானதொரு நிகழ்வு முற்றிலும் புதியது என்று குறிப்பிட்ட அவர், இந்த நகர்வு காரணமாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்கள் விசேட அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

    யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று திங்கட்கிழமை முழுவதும் பரவலாகக் கனமழையும், ஒருசில இடங்களில் மிகக் கனமழையும் பெய்யக்கூடும். தீவகப் பகுதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் நாளை செவ்வாய்க்கிழமை காலை வரை மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

    புத்தளம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை பெய்யக்கூடுவதுடன், தாழ்நிலங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு அபாயமும் உள்ளது.

    இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தொடர்ச்சியான மழையின் காரணமாக நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால், மலைப்பிரதேச மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    அர்னாப் புயல் மற்றும் வளிமண்டலச் சுழற்சியின் தாக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமேற்கு, மேற்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதால், மீனவர்கள் எக்காரணம் கொண்டும் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும், மழையுடன் கூடிய வேளைகளில் செறிவான இடிமின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
    மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

    விளம்பரம்

    தொடர்புடைய செய்திகள் NEW

    இலங்கை செய்திகள்

    கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

    கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

    147 0 0
    இலங்கை செய்திகள்

    யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

    யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

    136 0 0
    இலங்கை செய்திகள்

    கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

    வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

    130 0 0
    இலங்கை செய்திகள்

    மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

    கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

    129 0 0