உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாட்டை சூறையாடியவர்களிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்கக் கூடாது! : சரத் பொன்சேகா வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
125 பார்வைகள்

நீண்டகாலமாக நாட்டைச் சூறையாடிய ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் இலங்கைக்குச் செய்த பேரழிவுகளை மக்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும், தற்போதைய அரசில் சிறிய குறைபாடுகள் காணப்பட்டாலும் மீண்டும் பழைய அரசியல்வாதிகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்க நினைப்பது பாரிய தவறு என்றும் முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் நீண்டகாலமாக நிலவிய ஊழல்மிக்க அரசியல் கலாசாரமே பொருளாதாரச் சீரழிவுக்கும் மக்களின் வறுமைக்கும் பிரதான காரணம். வறிய மக்களுக்குத் தகரத் தகடுகள் மற்றும் தலையணைகள் போன்ற தற்காலிகப் பொருட்களைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுக்கொண்டதே பழைய ஆட்சியாளர்களின் தந்திரமாக இருந்தது.

நான் கடந்த காலத்தில் அந்த அரசியல் கட்டமைப்புக்குள் இருந்தபோதிலும், அங்கு நிலவிய ஊழலைச் சகிக்க முடியாமல் விலகினேன். தற்போது அத்தகைய ஊழல் கலாசாரத்தை நிராகரிக்கும் சக்தி ஆட்சியில் இருப்பது ஒரு சாதகமான மாற்றமே.

எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தமை, தொடர் மின்வெட்டு, தாங்க முடியாத வரிச்சுமை, மருந்துத் தட்டுப்பாடு மற்றும் விவசாயச் சீரழிவு ஆகியவற்றுக்கு அப்போதைய ஆட்சியாளர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

இளைஞர்கள் தமது வேலைவாய்ப்பு, வாகனம் மற்றும் வீடமைத்தல் போன்ற அடிப்படைக் கனவுகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் போனமைக்கு இத்தகைய ஊழல் அரசியல்வாதிகளே காரணம் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது.” – என்றார்.

நல்லாட்சி அரச காலத்தில் நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவமொன்றை நினைவுகூர்ந்த சரத் பொன்சேகா, விளக்கமறியலில் இருந்து வந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் அப்போதைய ஆளும்கட்சி அமைச்சர்கள் நடத்திய வாக்குவாதத்தைக் குறிப்பிட்டார். சிறையில் இருந்த ஜோன்ஸ்டனுக்குத் தாம் பிரியாணி மற்றும் பிரைட் ரைஸ் அனுப்பி வைத்ததாக ஆளும்கட்சி அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்திலேயே கூறியமை, வெளியில் எதிரிகளாகக் காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தங்களுக்குள் எத்தகைய இரகசிய உறவுகளையும் சலுகைகளையும் பேணி வந்தனர் என்பதைத் தோலுரித்துக் காட்டுவதாகத் தெரிவித்தார்.

கடந்தகால ஊழல் அரசியலின் கொடூர விளைவுகளைச் சுட்டிக்காட்டிய சரத் பொன்சேகா, தற்போதைய அரசின் சிறிய குறைபாடுகளைச் சாட்டாக வைத்து நாட்டை அழித்த பழைய அரசியல்வாதிகளிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க மக்கள் சிந்திக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாப்பதுடன், ஊழலுக்கு எதிராகத் தராசு தப்பாமல் சட்டத்தை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தி, அரச வளங்களைப் பாதுகாப்பதன் மூலமே நாட்டை உண்மையான முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

147 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

136 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

130 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

129 0 0