உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பருவ மழை ஆரம்பித்துள்ள நிலையில் தற்காலிக வீடுகளில் வசிப்போரின் நிலை கவலைக்கிடம்!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
151 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 17 ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் சொல்லனாத் துன்பங்களை எதிர்கொண்டும் கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்டுமுள்ள குடும்பங்கள் டித்வா வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் தற்போது ஆரம்பித்துள்ள பருவ மழையிலும் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்கியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில்கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெற்ற ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டு திட்ட பயனாளிகள் தெரிவில் ஏற்கனவே பல்வேறு திட்டங்களின் ஊடாக நிரந்தர வீடுகளைப் பெற்று முழுமைப்படுத்தியவர்களுக்கும் டித்வா பாதிப்புக்களை எதிர் கொள்ளாதவர்கள் நிரந்தர வீடுகளில் வசித்தவர்கள் வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிராம அலுவலர்களின் இவ்வாறான முறைகேடுகளால் அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்காலிக வீடுகளில் வாழ்வோரும் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்

கடந்த 2010ஆம் ஆண்டு மீள் குடியேற்றத்தில் இருந்து இன்றுவரை வீட்டுத் திட்டங்கள் எதனையும் பெற்றுக் கொள்ளாத பாதிக்கப்பட்ட அதிகளவான குடும்பங்கள் சுமார் 17 ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் சொல்லனாத் துன்பங்களை எதிர்கொண்டும் கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்டும் டித்வா வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் தற்போது ஆரம்பித்துள்ள பருவ மழையிலும் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்கியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் கோரக்கன் கட்டு புளியம்பொக்கணை ஆனைவிழுந்தான் மற்றும் ஆனந்தபுரம் கிராம அலுவலர் பிரிவுகளில் இதுவரை நிரந்தர வீட்டு திட்டங்கள் எதனையும் பெற்றுக் கொள்ளாத பெருமளவான குடும்பங்கள் உறவினர் – நண்பர்கள் வீடுகளிலும் தற்காலிக வீடுகளிலும் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றன.

இவர்களுக்கான வீட்டுத்திட்டங்களை வழங்காது குறித்த பகுதியில் ஏற்கனவே நிரந்தர வீட்டு திட்டங்களை பெற்றுக் கொண்டு அதனை முழுமைப்படுத்தி அதில் குடியிருந்து வரும் குடும்பங்கள் தனிநபர்கள் முதியோர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு முறைகேடான விதத்திலே வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

147 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

136 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

130 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

129 0 0