ஜெயந்திநகர் பிரதான வீதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் – 2026 மூலம் 99மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ள கிளிநொச்சி ஜெயந்திநகர் பிரதான வீதிக்கா அங்குரார்ப்பண நிகழ்வு இன்று25.10.2026 நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் க..இளங்குமரன் கலந்து கொண்டு புனரமைப்பு பணியை ஆரம்பித்து வைத்தார். குறித்த நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் பூ.ராஜ் வினோத், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் தே.சுஜீவன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்
சட்டமும் குற்றவாளிகளும் திருடியவர்கள் சட்டப்படி தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். ஜனாதிபதி கூறுவது போல் சட்டத்திற்குக்கீழ் அனைவரும் சமம். ஆனால், சட்டத்திற்கு மேலே இருந்து கொண்டு, தங்களது சர்வாதிகாரப் போக்கினால் நாட்டைத் திருடியதன் விளைவாகவே இன்று நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
விசாரணைகளும் தண்டனைகளும்: இன்று திருடர்களைப் பிடித்து நீதிமன்றங்களில் ஆதாரங்களுடன் நிறுவி விசாரணை நடத்தி வருகின்றனர். பல அமைச்சர்கள் மற்றும் குற்றவாளிகள் நிரந்தரமாகச் சிறையிலிருப்பது தவிர்க்க முடியாதது. சிறையில் உள்ளவர்கள் தங்களது குறைகளை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கின்றனர்.
சிறைச்சாலைகளின் நிலை: முற்காலத்தில் சாதாரண மக்களே சிறைகளில் இருந்தனர்; ஆனால் இன்று சிறைச்சாலைகளில் பெரிய வாகனங்கள் வந்துபோகும் அளவிற்கு வசதிகள் உள்ளன. பக்கச்சார்பற்ற வகையில் நீதி நிலைநாட்டப்படுவதால், குற்றவாளிகள் எம்மட்டத்தினராக இருந்தாலும் அவர்களுக்குச் சட்டம் தன் கடமையைச் செய்யும்.
அரசாங்கத்தின் தொழில்நுட்ப முன்னெடுப்புகள்: எமது அரசாங்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக ஆராய்ந்து போக்குவரத்துத்துறையை இலகுபடுத்தி வருகிறது. அரசாங்கம் தொழில்நுட்ப ரீதியாகச் சிறிய பறக்கும் விமானங்களை (டிரோன் போன்றவற்றை) அறிமுகப்படுத்திக் போக்குவரத்து முறையை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
அரசியல் மற்றும் பிற நிகழ்வுகள்: சிறுபிள்ளைகள் கோவில் கட்டி விளையாடுவது போல், மக்கள் இல்லாத இடங்களில் பொங்கல் பொங்கி அரசியல் செய்யும் நிலைகளும் காணப்படுகின்றன. பணங்களைக் கொடுத்துக் கூட்டங்களைக் கூட்டி, அரசியலை ஒழிக்க முற்படும் செயல்களும் நடக்கின்றன. நல்ல உள்ளங்களும் மதகுருமார்களும் அரசாங்கத்தைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர்.என தெரிவித்தார்.


