உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

டித்வா புயல் நிவாரண நிதிக்கு என்ன நடந்தது? : சஜித் கேள்வி

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
78 பார்வைகள்

டித்வா அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் மக்களைச் சென்றடையவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நாடாளுமன்றம் கூடி, டித்வா காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் 500 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கிய போதிலும், இந்த நிதியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நிதி மற்றும் பௌதீக ரீதியிலான முன்னேற்றம் பலவீனமான மட்டத்தில் காணப்படுகின்றது.

உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் முன்னேற்றம் 50 வீதம், 25 வீதம் போன்ற குறைந்த சதவீதத்திலேயே காணப்படுவதோடு, வெளிநாட்டு முதலீடுகள் மூலம் கிடைத்த உதவிகளும் குறைந்த அளவிலேயே கிடைத்துள்ளன. இதற்கு அரசு காரணம் கூற வேண்டும்.” – என்றார்.

உலகளாவிய காலநிலை மாற்றங்களுக்கு எதிர்பாராதவிதமாக முகங்கொடுக்க நேர்ந்துள்ளதால், தற்போது நாட்டில் காணப்படும் பொறிமுறை, வேலைத்திட்டம் மற்றும் சட்டங்கள் அனைத்தும் காலாவதியாகியுள்ளன என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,

“பேரழிவு ஏற்பட்ட பின் பதிலளிப்பதை விட, அதற்கு முன்னதாகவே தாக்கங்களைக் குறைக்கும் புதிய கட்டமைப்புகள் மற்றும் சட்டங்களை நோக்கிச் செல்வதற்கு அரசு தயாராக வேண்டும்.”- என்றும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் 4 ஆவது அறிக்கை பச்சைப் பொய்! : கோடீஸ்வரன் எம்.பி. குற்றச்சாட்டு

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நான்காவது அறிக்கையில், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள்…

84 0 0
இலங்கை செய்திகள்

பேராசிரியர் ராஜ் சோமதேவா ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி! : கஜேந்திரகுமார் எம்.பி. சாடல்

“முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கிழக்கு மாகாணத் தொல்லியல் தொடர்பான குழுவை நியமித்தபோது, அந்தக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் ராஜ் சோமதேவா செயற்பட்டார். ராஜ் சோமதேவா ஒரு…

78 0 0
இலங்கை செய்திகள்

அநுர தலைமையிலான அரசுக்கு ஆதரவாக குருநாகலிலும் மாபெரும் அமைதிப் பேரணி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசுக்கு மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ‘ஜனவரம புரவசியோ’ (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் குருநாகலில்…

67 0 0
இலங்கை செய்திகள்

குறிகாட்டுவான் வாகன தரிப்பிட விவகாரம் : முறையான பொறிமுறையை உருவாக்க வேண்டும் – அனுசியா ஜெயகாந்த் கோரிக்கை!

வேலணை குறிகாட்டுவான் இறங்குதுறையை அண்மித்த பகுதியில் இயங்கிவரும் வாகன தரிப்பிடம் தொடர்பில், சபையின் வருமானத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் பாதிக்கப்படாத வகையிலும்…

84 0 0