இணுவில் சந்தியில் கோர விபத்து : முதியவர் ப@லி!
இன்றையதினம் இணுவில் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். இதன்போது வன்னியசிங்கம் வீதி, தாவடி வடக்கினை சேர்ந்த கணேசன் பழனிலிங்கம் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் இன்று காலை பால் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார். பின்னர் இணுவில் சந்தி பகுதியில் துவிச்சக்கர வண்டியை உருட்டிக் கொண்டு சென்றவேளை, கந்தசுவாமி ஆலய பக்கத்தில் இருந்து வந்த டிப்பரானது மருதனார்மடம் பக்கம் திருப்ப முயன்றது.
இதன்போது குறித்த குடும்பஸ்தரின் மீது டிப்பர் ஏறியதில் விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

