வலிகாமம் கல்வி வலய சிறுவர் நாடகப் போட்டியில் வெற்றி பெற்றது குட்டியப்புலம் அ.த.க பாடசாலை
வருடாந்தம் வலிகாமம் கல்வி வலயத்தால் நடாத்தப்படும் சிறுவர் நாடகப் போட்டியில் முதலாம் இடத்தை குட்டியப்புலம் அ.த.க பாடசாலை பெற்றது.
இரண்டாம் இடத்தை வட்டு இந்துக் கல்லூரியும், மூன்றாம் இடத்தை மானிப்பாய் மகளிர் கல்லூரியும் பெற்றன.
வெற்றியாளர்களிற்கான நினைவுச் சின்னத்தை வலிகாமம் கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.தேவகுமாரன் வழங்குவதையும், அருகில் திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.சஞ்சீவன் நிற்பதையும் படத்தில் காணலாம்.
கடந்த வருடம் தேசிய ரீதியில் இடம்பெற்ற இளம் விவசாய விஞ்ஞானி போட்டியிலும் பங்குபற்றி குட்டியும்புலம் அ த க பாடசாலை மாணவன் ஒருவன் தங்கப்பதக்கம் பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.




