உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழ், முஸ்லிம், மலையகப் பிரதிநிதிகளுடன் சஜித் தீவிர கலந்தாய்வு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
81 பார்வைகள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டில் தற்சமயம் நிலவும் பொருளாதார நிலைமையால் இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து விவரங்கள் கேட்டறியப்பட்டன.

குறிப்பாக, தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக மக்களின் வருமான மட்டம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களினது குடும்பப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டன.

வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்குக் காணப்படும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் போலவே, சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் இம்மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டன.

தரமான சுகாதார சேவைகளுக்கான பிரவேசம், பாடசாலைக் கல்வியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளின் போசாக்கு நிலைமை தொடர்பாகவும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ. இராதாகிருஷ்ணன், ஞானமுத்து ஸ்ரீநேசன், எம். எஸ். உதுமாலெப்பே, பத்மநாதன் சத்தியலிங்கம், முஜிபுர் ரஹ்மான், கவீந்திரன் கோடீஸ்வரன், காதர் மஸ்தான் மற்றும் ஹபீப் ரிபான் ஆகியோர் இன்றைய இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மின் உற்பத்திச் செலவு குறைந்துள்ள போதும் கட்டண உயர்வும் மின் தடையும் தொடர்வது ஏன்? : சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

மின் உற்பத்திச் செலவு குறைந்துள்ள போதிலும் மற்றும் மாற்று நீர்மின் சக்தி உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், கட்டண உயர்வும் மின் தடையும் தொடர்வதற்கான காரணம் என்ன என்பது…

73 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் தொடரும் பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொழும்பு மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 22, 2026) தொடர்ந்து பெய்து வரும் பலத்த அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தின் சமீபத்திய…

71 0 0
இலங்கை செய்திகள்

சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புக்களை பட்டியலிட்டார் ரவிகரன் எம்.பி!

இந்த நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்…

78 0 0
இலங்கை செய்திகள்

இனந்தெரியாத நபர்களால் மூன்று ஏக்கர் நெற்செய்கை அழிப்பு.!

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம், ஆணைப்பாம்வெளி பகுதியில் விவசாயி ஒருவரின் சுமார் மூன்று ஏக்கர் நெற்செய்கைக்கு இரசாயனக் கலவை தெளிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு…

78 0 0