உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மின்சாரக் கட்டமைப்பின் முறிவால் நாட்டிற்கு 200 பில்லியனுக்கும் அதிக இழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
87 பார்வைகள்

அரசின் அலட்சியப் போக்கு காரணமாக தேசிய மின்சாரக் கட்டமைப்பு மீண்டும் ஒருமுறை செயலிழந்தமையால், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த திவுலப்பிட்டிய இணை அமைப்பாளர் சங்க அபயவர்தன இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த ஆண்டு பெப்ரவரி 9ஆம் திகதி ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக நாட்டிற்கு 8.4 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தது.

எனினும், அத்தகைய முறிவுகளைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், கடந்த சனிக்கிழமையும் மீண்டும் மின்சாரக் கட்டமைப்பு செயலிழந்துள்ளது.

தேசிய முறைமை மேலாளரால் (National System Manager) 2024 நவம்பர் 12 அன்று வழங்கப்பட்ட கடிதத்தின் மூலம்; பாதுகாப்பு அமைப்புகளைப் புதுப்பித்தல், பகல் நேரத்தில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கட்டண முறைகளை உருவாக்குதல் மற்றும் சூரிய ஆற்றலைச் சேமிப்பதற்கான பேட்டரி அமைப்புகளை நிறுவுதல் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், அரசாங்கம் அந்தப் பரிந்துரைகள் அனைத்தையும் புறக்கணித்துள்ளது.

டீசல் மாஃபியாவைத் தொடர்வதற்காகவே கடந்த சனிக்கிழமையும் மின்சாரக் கட்டமைப்பு முறிவடைய அனுமதிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததால் நாட்டிற்கு மில்லியன் கணக்கான டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தற்போது அதிக செலவில் டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினசரி டீசல் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு 30% முதல் 35% வரை அதிகரித்துள்ளது. மேல் கொத்மலை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே இந்த முறிவுக்குக் காரணம் என மின்சார அமைச்சர் கூறியபோதிலும், நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தின் 187 மெகாவாட் திறனில் இயங்கிய முதலாவது டர்பைன் செயலிழந்ததே உண்மையான காரணம் எனத் தெரியவருகிறது.

அன்றைய தினம் அதில் பராமரிப்புப் பணிகளும் நடைபெற்று வந்துள்ளன. தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நாட்டின் ஒட்டுமொத்த மின்சார அமைப்பும் இரண்டாவது முறையாகவும் முடங்கியுள்ளது.

ரூ. 14, 20 மற்றும் 27 போன்ற குறைந்த விலையில் சூரிய மின்சாரத்தைப் பெற முடியும் என்ற போதிலும், அதிக விலையில் டீசல் மின்சாரத்தைப் பெறுவதற்குத் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிக மின்சாரக் கட்டணம் காரணமாக முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு 200 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை 1/3 பங்கினால் குறைப்பதாக அளித்த வாக்குறுதியை மீறி, கட்டணத்தை இரண்டு, மூன்று மடங்காக அரசாங்கம் உயர்த்தியுள்ளது. நாட்டில் மின் விநியோகமும் சீராக இல்லை.

மேலும், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்படும் எல்நினோ வறண்ட வானிலையைப் பயன்படுத்தி, அவசர மின் கொள்முதல் மூலம் முறைகேடுகளில் ஈடுபட அரசாங்கம் தயாராகி வருகிறது.

மக்களின் பிரச்சினைகளுக்கோ அல்லது மின்சாரப் பிரச்சினைகளுக்கோ தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஜனாதிபதி தனது தனிப்பட்ட சர்வாதிகார ஆட்சியை நிறுவும் திட்டத்திற்காக நாட்டின் மின்சாரக் கட்டமைப்பை கடத்தல்காரர்களுக்குப் பலி கொடுப்பதை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டிக்கிறது.

அத்துடன், சூரிய மின்சக்தி திட்டங்களை முடக்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிக்கை: மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை.!

இலங்கைக்கு அருகில் காணப்படும் தாழமுக்க மண்டலம் தற்போது நாட்டின் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை அவதானிப்பு மையத்தின் கணிப்பீட்டு பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ்…

0 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது.!

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று புதன்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஹெரோயின் போதைப்பொருள், தோட்டாக்கள் மற்றும் வாள் உள்ளிட்ட பொருட்களுடன் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும்…

79 0 0
இலங்கை செய்திகள்

இரு பிள்ளைகளின் தந்தை உ**யிரிழந்த நிலையில் மீட்பு.!

ஹட்டன், பன்மூர் பகுதியில் உள்ள குளமொன்றிலிருந்து இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று (22) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக…

91 0 0
இலங்கை செய்திகள்

அரசின் புதிய சட்டமூலத்துக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை போர்க்கொடி.!

அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ ஊடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்று சர்வதேச மன்னிப்புச்…

90 0 0