உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இரு பிள்ளைகளின் தந்தை உ**யிரிழந்த நிலையில் மீட்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
85 பார்வைகள்

ஹட்டன், பன்மூர் பகுதியில் உள்ள குளமொன்றிலிருந்து இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று (22) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டன், வனராஜா தோட்டத்தைச் சேர்ந்த 58 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் கடந்த சில காலமாக கடையொன்றை நடத்தி வந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குளக்கரையிலிருந்து உயிரிழந்தவருக்குச் சொந்தமானவை எனச் சந்தேகிக்கப்படும் பாதணிகள், பணப்பை மற்றும் குடை ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த நபர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது அவரது மரணத்துக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது.!

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று புதன்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஹெரோயின் போதைப்பொருள், தோட்டாக்கள் மற்றும் வாள் உள்ளிட்ட பொருட்களுடன் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

மின்சாரக் கட்டமைப்பின் முறிவால் நாட்டிற்கு 200 பில்லியனுக்கும் அதிக இழப்பு.!

அரசின் அலட்சியப் போக்கு காரணமாக தேசிய மின்சாரக் கட்டமைப்பு மீண்டும் ஒருமுறை செயலிழந்தமையால், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி…

82 0 0
இலங்கை செய்திகள்

அரசின் புதிய சட்டமூலத்துக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை போர்க்கொடி.!

அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ ஊடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்று சர்வதேச மன்னிப்புச்…

84 0 0
இலங்கை செய்திகள்

பாம் எண்ணெய் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சின் அதிகாரிகள் முயற்சி.!

நிதி அமைச்சின் சில அதிகாரிகள் ஜனாதிபதியையும் அமைச்சரவையையும் தவறாக வழிநடத்தி, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக பாம் எண்ணெய் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு முயற்சித்து…

82 0 0