உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசின் புதிய சட்டமூலத்துக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை போர்க்கொடி.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
86 பார்வைகள்

அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ ஊடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்று சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் சமூகத்துக்குள் மீண்டும் உறுதிப்படுத்தப்படுவதற்கான பாரிய அபாயம் தோன்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன,
“கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட ஆரம்ப வடிவத்துடன் ஒப்பிடும்போது சில திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், நீண்டகாலமாக அடக்குமுறையாகப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தச் சட்டமூலமும் தொடர்ந்தும் மிக விரிவான மற்றும் தெளிவற்ற பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணங்களைக் கொண்டிருக்கின்றது.

அரசை விமர்சிப்பவர்கள், சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகாரிகளால் அவ்வப்போது ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட இவ்வாறான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திருத்துவது குறித்து தீவிர கவனமும் பரிசீலனையும் செலுத்தப்பட வேண்டும்.

புதிய சட்டமூலத்தின் ஊடாக நடைபெற வேண்டியது கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிலிருந்து விலகுவதுதானேயன்றி, அதிகாரிகளுக்கு அடக்குமுறைக்காக மேலும் புதிய கருவிகளை வழங்குவதல்ல.” – என்று குறிப்பிட்டுள்ளது.

தடுப்புக் காவல் அதிகாரம் குறித்து மேலும் விவரித்துள்ள அந்த அமைப்பு,
“பயங்கரவாதம் தொடர்பில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகுபவர்களை ஓராண்டு வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கும், வழக்கு விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னர் மேலும் ஓராண்டு காலம் தடுப்புக் காவலில் வைப்பதற்கும் இந்தச் சட்டம் அனுமதி வழங்குகின்றது.

இதற்கமைய, வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர்கூட ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் தடுத்து வைத்திருக்க முடியும் என்பதோடு, இது மனித உரிமைகளையும் நியாயமான வழக்கு விசாரணைக்கான உரிமையையும் கடுமையாக மீறும் செயலாகும்.” – என்று சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது.!

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று புதன்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஹெரோயின் போதைப்பொருள், தோட்டாக்கள் மற்றும் வாள் உள்ளிட்ட பொருட்களுடன் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும்…

75 0 0
இலங்கை செய்திகள்

மின்சாரக் கட்டமைப்பின் முறிவால் நாட்டிற்கு 200 பில்லியனுக்கும் அதிக இழப்பு.!

அரசின் அலட்சியப் போக்கு காரணமாக தேசிய மின்சாரக் கட்டமைப்பு மீண்டும் ஒருமுறை செயலிழந்தமையால், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி…

83 0 0
இலங்கை செய்திகள்

இரு பிள்ளைகளின் தந்தை உ**யிரிழந்த நிலையில் மீட்பு.!

ஹட்டன், பன்மூர் பகுதியில் உள்ள குளமொன்றிலிருந்து இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று (22) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக…

87 0 0
இலங்கை செய்திகள்

பாம் எண்ணெய் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சின் அதிகாரிகள் முயற்சி.!

நிதி அமைச்சின் சில அதிகாரிகள் ஜனாதிபதியையும் அமைச்சரவையையும் தவறாக வழிநடத்தி, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக பாம் எண்ணெய் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு முயற்சித்து…

84 0 0