உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாம் எண்ணெய் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சின் அதிகாரிகள் முயற்சி.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
83 பார்வைகள்

நிதி அமைச்சின் சில அதிகாரிகள் ஜனாதிபதியையும் அமைச்சரவையையும் தவறாக வழிநடத்தி, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக பாம் எண்ணெய் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு முயற்சித்து வருவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் (National Movement for Consumer Rights Protection) குற்றஞ்சாட்டியுள்ளது.

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் இன்றைய தினம் (22) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அதன் தலைவர் ரஞ்சித் விதானகே இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்காக அமுலில் உள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தவிர்த்து, பாம் எண்ணெய் இறக்குமதியை மீண்டும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பாம் எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய அரசாங்கமும் இந்நிபுணர் குழுவின் தீர்மானங்களையே பின்பற்றி வரும் பின்னணியிலும், பாம் எண்ணெய் இறக்குமதிக்கான அவசியமில்லை என வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு ஆகியவற்றின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் தெளிவுபடுத்தியுள்ள நிலையிலும், நிதி அமைச்சின் சில அதிகாரிகள் நிபுணர் அமைப்புகளின் பரிந்துரைகளைப் புறக்கணித்து இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவது கவலைக்குரிய விடயமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையை அதிகாரிகள் தமது சுய விருப்பத்திற்கேற்ப கொள்கை முடிவுகளை எடுப்பதற்காகத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ள நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம், அரசாங்கத்தின் பெரும்பான்மை ஆணையை மதித்து பொதுமக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

எனவே, வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக பாம் எண்ணெய் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்கும் முயற்சிகள் தொடர்பில் ஜனாதிபதி உடனடியாகக் கவனம் செலுத்தி, அவற்றை தடுத்து நிறுத்தி நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது.!

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று புதன்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஹெரோயின் போதைப்பொருள், தோட்டாக்கள் மற்றும் வாள் உள்ளிட்ட பொருட்களுடன் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

மின்சாரக் கட்டமைப்பின் முறிவால் நாட்டிற்கு 200 பில்லியனுக்கும் அதிக இழப்பு.!

அரசின் அலட்சியப் போக்கு காரணமாக தேசிய மின்சாரக் கட்டமைப்பு மீண்டும் ஒருமுறை செயலிழந்தமையால், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி…

82 0 0
இலங்கை செய்திகள்

இரு பிள்ளைகளின் தந்தை உ**யிரிழந்த நிலையில் மீட்பு.!

ஹட்டன், பன்மூர் பகுதியில் உள்ள குளமொன்றிலிருந்து இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று (22) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக…

85 0 0
இலங்கை செய்திகள்

அரசின் புதிய சட்டமூலத்துக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை போர்க்கொடி.!

அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ ஊடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்று சர்வதேச மன்னிப்புச்…

84 0 0