மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உ**யிரிழப்பு.!
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரித்தகந்த பிரதேசத்தில் உள்ள நிர்மாணப் பணித்தளமொன்றில் நேற்று புதன்கிழமை (21) இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிர்மாணப் பணித்தளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மூவர் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மூவரும் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபராவார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

