உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்தியாவில் ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவில் இனிப்பு சேர்க்கத் தடை? 

இந்திய செய்திகள் 2 மணி நேரம் முன்
77 பார்வைகள்

ஆறு மாதம் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் (Sucrose) மற்றும் பிரக்டோஸ் (Fructose) போன்ற சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்க இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) யோசனை தெரிவித்துள்ளது.

தற்போதைய நடைமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் சர்க்கரையைச் சேர்க்க நிறுவனங்களுக்கு அனுமதி உள்ள நிலையில், புதிய விதிமுறைகளின் மூலம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களின் தரத்தை மேலும் தீவிரமாகக் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுவயதிலேயே ஏற்படும் உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துவதையும், தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்பதையுமே இத்திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அண்மைக்காலமாக இந்தியாவில் உணவகங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு நிறுவனங்கள் மீதான சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உணவுப் பொதிகளில் எச்சரிக்கை லேபிள்களைக் கட்டாயமாக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 105 கிலோ எடை கொண்ட அரிய வகை மீன்கள்.!

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து நேற்று (20) 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து…

83 0 0
இந்திய செய்திகள்

டைகர் ஷெராஃப்பின் கார் மீது துப்பாக்கிச் சூடு; ராஜஸ்தானில் மூவர் கைது!

மும்பையின் ஜுஹு பகுதியில் போலிவூட் நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர், ராஜஸ்தானின் கோட்டாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

81 0 0
இந்திய செய்திகள்

இந்திய–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்!

இந்தியாவும் வொஷிங்டனும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், அந்த ஒப்பந்தம் முந்தைய ஒப்பந்தங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

86 0 0
இந்திய செய்திகள்

இந்திய ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த வாரம் சுமார் இரண்டு சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களில் பதிவான வலுவான வாராந்திர முன்னேற்றமாக…

97 0 0