உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உயிருக்குப் போராடும் யானை; பிரதேச செயலாளர் நேரில் சென்று அவதானிப்பு.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
72 பார்வைகள்

சம்மாந்துறை சேகப்பற்று வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா நேரடியாகச் சம்பவ இடத்திற்கு நேற்றைய தினம் (21) விஜயம் செய்து நிலைமையைப் பார்வையிட்டார்.

வயல்வெளியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்த யானையின் தீவிர நிலையைக் நேரில் அவதானித்த அவர், உடனடியாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியுள்ளார்.

வனவிலங்கு மருத்துவக் குழுவினர் மற்றும் அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, யானையின் உடல்நிலையைப் பரிசோதித்து அதற்குத் தேவையான அவசர மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும், அதைப் பாதுகாப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதேச செயலாளர் கடுமையாக வலியுறுத்தினார்.

இந்தத் திடீர் கள விஜயத்தின் போது, சம்மாந்துறை கிராம சேவகர் ஜீ. சாஜீத் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் உடனிருந்தனர்.

குறித்த யானை எந்தக் காரணத்தினால் இவ்வாறானதொரு ஆபத்தான நிலைக்குள்ளானது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

யானை நோய்வாய்ப்பட்டதா அல்லது மனித-யானை மோதல் போன்ற ஏதேனும் அசம்பாவிதங்களால் காயமடைந்ததா அல்லது குப்பைகளை உண்டதால் ஏற்பட்ட உடலியல் கோளாறா என்பது குறித்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் விரிவான பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐக்கிய நாடுகள் உயிர்ப்பல்வகைமை மாநாட்டில் பங்கேற்கும் இலங்கை இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா!

முல்லைத்தீவைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான அனுசன் சிவராசா, ஆர்மேனியாவின் யெரெவான் நகரில் ஒக்டோபர் 22 முதல் 29 வரை நடைபெறும் ஐக்கிய நாடுகள் உயிர்ப்பல்வகைமை ஒப்பந்தத்தின்…

80 0 0
இலங்கை செய்திகள்

மின் உற்பத்திச் செலவு குறைந்துள்ள போதும் கட்டண உயர்வும் மின் தடையும் தொடர்வது ஏன்? : சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

மின் உற்பத்திச் செலவு குறைந்துள்ள போதிலும் மற்றும் மாற்று நீர்மின் சக்தி உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், கட்டண உயர்வும் மின் தடையும் தொடர்வதற்கான காரணம் என்ன என்பது…

79 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் தொடரும் பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொழும்பு மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 22, 2026) தொடர்ந்து பெய்து வரும் பலத்த அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தின் சமீபத்திய…

75 0 0
இலங்கை செய்திகள்

சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புக்களை பட்டியலிட்டார் ரவிகரன் எம்.பி!

இந்த நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்…

79 0 0