“யானைகள் பொழுதுபோக்கிற்கானவை அல்ல”: நடிகை திவ்யா ஸ்பந்தனா கண்டனம்!
குறுகலான தெருக்களில் ஊர்வலங்களாக யானைகளை அழைத்துச் செல்வது அவற்றிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என பிரபல கன்னட நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் “நாங்கள் நமது பாரம்பரியங்களுக்கும் கலாசாரங்களுக்கும் மதிப்பளிக்கிறோம். ஆனால், அவற்றில் சில கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. கடந்த காலத்தின் அனைத்து நடைமுறைகளும் நிகழ்காலத்திற்குப் பொருத்தமானவை அல்ல.” என தெரிவித்துள்ளார்.
அத்துடன், “யானைகள் என்பவை பொழுதுபோக்கிற்கானவை அல்ல. குறுகலான தெருக்களில், பெரும் கூட்டத்திற்கும் இரைச்சலுக்கும் இடையே யானைகளை அழைத்துச் செல்வது, அவற்றை பயத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

