உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு வழங்கப்பட்ட சம்பளம்!

சினிமா 1 நாள் முன்
92 பார்வைகள்

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் (Cameo) நடித்துள்ள பொலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ.25 கோடி(INR) வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகத் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் மட்டுமே வரும் காட்சிகளில் தோன்றுவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவருக்கு இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளமை சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

முன்னதாக கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான ‘பகவான் தாதா’ என்ற இந்திப் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஹிருத்திக் ரோஷன், தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஜெயிலர் 2’ படத்தின் மூலம் மீண்டும் ரஜினியுடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

BigBoss வீட்டில் அதிரடி : பச்சை இறைச்சியை சாப்பிட்ட டிடிஎஃப் வாசன்!

பிக்பாஸ் சீசன் 10 தொடங்கி 5 வாரங்கள் கடந்துள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. 5 ஆவது வார இறுதியில் சாந்தினி வோட்டிங் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில்,…

65 0 0
சினிமா

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் தனது 75ஆவது வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். 1989ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர், 300 இற்கும் மேற்பட்ட…

88 0 0
சினிமா

“யானைகள் பொழுதுபோக்கிற்கானவை அல்ல”: நடிகை திவ்யா ஸ்பந்தனா கண்டனம்!

குறுகலான தெருக்களில் ஊர்வலங்களாக யானைகளை அழைத்துச் செல்வது அவற்றிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என பிரபல கன்னட நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா (ரம்யா)…

85 0 0
சினிமா

நன்றி மறந்தாரா அஜித் – திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

தமிழ் ரசிகர்களால் ‘தேனிசைத் தென்றல்’ எனக் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் தேவா, தனது 75ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல…

98 0 0