உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டிற்கான பகிரங்க கேள்வி கோரல் அறிவித்தல்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
111 பார்வைகள்

நாவிதன்வெளிப் பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகள், நடமாடும் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை 01.01.2027 தொடக்கம் 31.12.2027 வரையான ஒரு வருட காலப்பகுதிக்கு குத்தகைக்கு விடுவதற்காகத் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து சீல் வைக்கப்பட்ட கேள்விகள் கோரப்பட்டுள்ளன.

குத்தகைக்கு விடப்படும் முக்கிய நிலையங்கள்:
மாட்டிறைச்சிக் கடைகள்:
12ஆம் கிராமம் மாட்டிறைச்சிக் கடை, சொறிக்கல்முனை மாட்டிறைச்சிக் கடை (தௌஹீத் பள்ளி), சவளக்கடை மாட்டிறைச்சிக் கடை (பிலால் ஜும்ஆ பள்ளி), மத்திய முகாம் மாட்டிறைச்சிக் கடை (சந்தைப் பகுதி)

பொதுச் சந்தைகள், நடமாடும் சந்தைகள் மற்றும் ஏனைய கடைகள்:
மத்திய முகாம் நடமாடும் சந்தை & பொதுச் சந்தை, அன்னமலை பொதுச் சந்தை & நடமாடும் சந்தை, நடமாடும் சந்தை (முஸ்லிம் பிரிவு), சொறிக்கல்முனை வாராந்தச் சந்தை & நடமாடும் சந்தை, ஆட்டிறைச்சிக் கடை (அன்னமலை பொதுச் சந்தை), கோழி இறைச்சிக் கடை (அன்னமலை பொதுச் சந்தை)

விண்ணப்பப் படிவ விநியோகம்: 15.10.2026 தொடக்கம் 30.10.2026 வரை (அலுவலக வேலை நாட்களில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம்).

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இறுதி நேரம்:
30.10.2026 பிற்பகல் 02.30 மணிக்கு முன்னர் (பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நாவிதன்வெளி பிரதேச சபையின் தலைமை அலுவலகக் கேள்விப் பெட்டியிலோ இடலாம்).

கேள்விப் பத்திரங்கள் திறக்கப்படும் நேரம்: 30.10.2026 பிற்பகல் 03.00 மணிக்கு.

விண்ணப்பதாரிகளுக்கான முக்கிய நிபந்தனைகள்:
பிரதேச சபையினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ விண்ணப்பப் படிவத்திலேயே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

படிவத்தைப் பெற்றுக்கொள்ளும் போது தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு மற்றும் கிராம உத்தியோகத்தரின் வதிவிடச் சான்றிதழ் என்பன சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பிரதேச சபைக்கு முந்தைய ஒப்பந்தங்களின் கீழ் நிலுவைப் பணங்களை வைத்துள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பக் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் அவசியமாகும்.

கேள்வி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், தெரிவு செய்யப்படும் கேள்விப் பணத்தை உரிய காலப்பகுதிக்குள் செலுத்துவதற்குத் தயார்நிலையில் இருத்தல் வேண்டும்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விரிவான நிபந்தனைகளை நாவிதன்வெளி பிரதேச சபை அலுவலக அறிவித்தல் பலகையில் பார்வையிட முடியும் எனத் தவிசாளர்/ செயலாளர் அறிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

148 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

138 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

131 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

130 0 0