உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சொய்சாபுர துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரிகள் கடத்திச் சென்ற உந்துருளி கண்டுபிடிப்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
121 பார்வைகள்

மொறட்டுவை, சொய்சாபுர பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்று விட்டுத் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரிகள் கடத்திச் சென்ற உந்துருளி பிலியந்தலை, சித்தமுல்ல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (20) இரவு 8.30 மணியளவில் சொய்சாபுர பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அதன் உரிமையாளர் உயிரிழந்ததுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வாடிக்கையாளரான பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் வந்த இனந்தெரியாத இருவர், T-56 ரக துப்பாக்கியால் உணவக உரிமையாளரை இலக்கு வைத்துச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் பயணித்த காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பிலியந்தலை, சுவாரபொல பகுதியில் காரை நிறுத்திவிட்டு, வானத்தை நோக்கிச் சுட்டு உந்துருளி ஓட்டுநர் ஒருவரை அச்சுறுத்தி அவரிடமிருந்த உந்துருளியைக் கடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட உந்துருளி சித்தமுல்ல பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த காரின் இலக்கத் தகடும்​ துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் விழுந்து கிடந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

148 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

138 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

131 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

130 0 0