உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மருதமுனை கடற்கரையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்ற இறுதி அறிவித்தல்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
149 பார்வைகள்

இலங்கையின் கடலோர வலய எல்லைக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றுவது தொடர்பில், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைகள் திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளரால் இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைகள் சட்டத்தின் (மற்றும் அதன் திருத்தச் சட்டங்களின்) கீழ், உரிய அனுமதிப்பத்திரமின்றி கடலோர வலய எல்லைக்குள் எவ்வித கட்டுமானங்களையோ அல்லது வணிகக் கூடங்களையோ அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

திணைக்களப் பொறியியலாளர் மற்றும் கள உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய பரிசோதனையின் போது, மருதமுனை கடற்கரையை அண்டிய பகுதியில் (முன்மொழியப்பட்ட கடலோர வலய எல்லையிலிருந்து 25 மீற்றருக்குள்) எவ்வித சட்டபூர்வ அனுமதியுமின்றி தற்காலிக மற்றும் நிரந்தரச் சட்டவிரோதக் கூடங்கள் மற்றும் வணிக நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, இவ்வறிவித்தல் கிடைக்கப்பெற்று அல்லது குறித்த இடத்தில் ஒட்டப்பட்டு 07 நாட்களுக்குள் (2026 அக்டோபர் 22ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு முன்னர்) சட்டவிரோதக் கட்டுமானங்களையும் அதனுள்ளே இருக்கும் பொருட்களையும் சொந்தச் செலவில் முழுமையாக அகற்றி, கடற்கரைப் பகுதியை பழைய நிலைக்குக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றத் தவறினால், சட்ட விதிமுறைகளின் படி உரிய நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திணைக்களத்தினால் அக் கட்டுமானங்கள் முழுமையாக இடித்து அகற்றப்படும். அவ்வாறு அகற்றும் போது ஏற்படும் எவ்வித சேதங்களுக்கும் அல்லது பொருட்களின் இழப்புகளுக்கும் அரசாங்கமோ அல்லது இத்திணைக்களமோ பொறுப்பேற்காது. அத்துடன், இடித்து அகற்றுவதற்கு ஏற்படும் முழுச் செலவீனங்களும் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்தே சட்டபூர்வமாக அறவிடப்படும் எனவும் பிராந்திய பொறியியலாளர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

131 0 0