உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நன்றி மறந்தாரா அஜித் – திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

சினிமா 1 நாள் முன்
99 பார்வைகள்

தமிழ் ரசிகர்களால் ‘தேனிசைத் தென்றல்’ எனக் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் தேவா, தனது 75ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’ உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு வெற்றிப் பாடல்களை வழங்கிய தேவா, குறிப்பாக அஜித்தின் ஆரம்பகாலத் திரைப்படங்களின் இசை வெற்றியில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.

‘வான்மதி’, ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘முகவரி’, ‘வாலி’, ‘சிட்டிசன்’, ‘ரெட்’, ‘ஆனந்த பூங்காற்றே’ உள்ளிட்ட அஜித் நடித்த பல திரைப்படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், தேவாவின் மறைவு தொடர்பில் அஜித் குமார் இதுவரை பொதுவெளியில் இரங்கல் செய்தி வெளியிடவில்லை எனக் கூறி, ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அஜித்தின் திரைப்படங்களின் வெற்றிப் பாடல்களில் தேவா ஆற்றிய பங்களிப்பைச் சுட்டிக்காட்டும் ரசிகர்கள், தனது திரைப்பயணத்தின் ஆரம்பகாலத்தில் முக்கிய பங்காற்றிய இசையமைப்பாளரின் மறைவுக்கு அஜித் இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும் எனத் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

BigBoss வீட்டில் அதிரடி : பச்சை இறைச்சியை சாப்பிட்ட டிடிஎஃப் வாசன்!

பிக்பாஸ் சீசன் 10 தொடங்கி 5 வாரங்கள் கடந்துள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. 5 ஆவது வார இறுதியில் சாந்தினி வோட்டிங் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில்,…

67 0 0
சினிமா

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்!

பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் தனது 75ஆவது வயதில் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். 1989ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இவர், 300 இற்கும் மேற்பட்ட…

89 0 0
சினிமா

“யானைகள் பொழுதுபோக்கிற்கானவை அல்ல”: நடிகை திவ்யா ஸ்பந்தனா கண்டனம்!

குறுகலான தெருக்களில் ஊர்வலங்களாக யானைகளை அழைத்துச் செல்வது அவற்றிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என பிரபல கன்னட நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா (ரம்யா)…

86 0 0
சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு வழங்கப்பட்ட சம்பளம்!

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் (Cameo) நடித்துள்ள பொலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ.25 கோடி(INR)…

92 0 0