முக்கோண ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
ராவல்பிண்டியில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போட்டியில் இங்கிலாந்து அணியை 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைக் குவித்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிரடியாக விளையாடிய ஹசன் நவாஸ் (Hasan Nawaz) அதிகபட்சமாக 79 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் சோனி பேக்கர் (Sonny Baker) 65 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 303 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
இங்கிலாந்து சார்பில் டொம் பேண்டன் (Tom Banton) அதிகபட்சமாக 57 ஓட்டங்களைப் பெற்றார்.
பாகிஸ்தான் அணியின் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அரஃபாத் மின்ஹாஸ் (Arafat Minhas) 40 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களைக் வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.


