உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
21 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ். நவீன சந்தைப் பகுதியில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு : வடக்கு ஆளுநர் வாக்குறுதி

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
77 பார்வைகள்

யாழ்ப்பாண நகரின் இதயமாக விளங்கும் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மோசமான நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட்டு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார்.

ஆளுநருக்கும் யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (20.10.2026) செவ்வாய்க்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் பராமரிப்பின்மை, மலசலகூடங்களின் மோசமான நிலைமை, இரவு வேளைகளில் இடம்பெறும் சமூகவிரோதச் செயற்பாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் வணிகர் கழகப் பிரதிநிதிகள் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். இவ்விடயங்கள் தொடர்பில் பலமுறை முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.

மேலும், கடைகளின் உரிம மாற்ற நடவடிக்கைகளில் காணப்படும் தாமதத்தைச் சுட்டிக்காட்டிய அவர்கள், அதனை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரினர். எதிர்காலத்தில் வாடகை மீள்நிர்ணயம் செய்யப்படும்போது உரிம மாற்றச் செயன்முறையிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதையும் எடுத்துரைத்தனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் அதிகரித்துள்ள நெரிசல் மற்றும் தனியார் பேருந்துச் சேவைகளால் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவது தொடர்பிலும் வணிகர் கழகப் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

வணிகர் கழகத்தினரின் கோரிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட ஆளுநர், விரைவில் நவீன சந்தைக் கட்டடத் தொகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு, பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் மற்றும் பிரத்தியேகச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயி@ரிழப்பு : மேலும் ஒருவர் காயம்

அனுராதபுரம் – நம்படகஸ்வேவ பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மழை காரணமாக, வயல் பகுதியில்…

76 0 0
இலங்கை செய்திகள்

தராதரம், பதவி அல்லது அதிகாரம் போன்றவற்றிற்காக சட்டத்தை வளைக்காமல் அனைவருக்கும் சமமான நீதி வழங்கப்பட வேண்டும்!

உயர் நீதிமன்றத்தினால் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கத்தால் செயற்பட முடியாது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை…

93 0 0
இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா

இலங்கைப் பாராளுமன்றத்தில் 2026ம் ஆண்டுக்கான நவராத்திரி விழா சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்ற உத்தியோகஸ்தர்களின் ஏற்பாட்டில்இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினரால் நடாத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மத…

81 0 0
இலங்கை செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் உயி@ரிழந்த 15 வயது மாணவி!

இன்றையதினம் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவமானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது திருகோணமலை – தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த நபீர் பாத்திமா…

144 0 0