யாழ். போதனா வைத்தியசாலையில் உயி@ரிழந்த 15 வயது மாணவி!
இன்றையதினம் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவமானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது திருகோணமலை – தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த நபீர் பாத்திமா நதீகா (வயது 15) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த மாணவிக்கு தலைவலி ஏற்பட்ட நிலையில் திருகோணமலையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவருக்கு மூளையில் கட்டி இருக்கின்ற விடயம் தெரிய வந்துள்ளது.
அதன்பின்னர் சத்திர சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை யாழ்ப்பாணம் பொலிஸார் நெறிப்படுத்தினர். இந்த சம்பவமானது அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

