உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
21 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அம்பேவெல நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகளும் 8 அங்குலம் வரை திறப்பு!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
68 பார்வைகள்

அதிக மழைவீழ்ச்சி காரணமாக, அம்பேவெல நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகளும் 8 அங்குலம் (240.88 கன அடி) வரை திறக்கப்பட்டுள்ளன என நுவரெலியா பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.

இந்த வழிந்தோடும் கதவுகள் திறக்கப்பட்டதால், ஆக்ரா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து, டயகம, லிந்துல, அக்கரபத்தனை மற்றும் தலவகலை வழியாக மேல் கொத்தமலை நீர்த்தேக்கத்திற்குள் பாய்ந்து கொண்டிருக்கிறது.

எனவே, ஓயாவின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் மற்றும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதல் கன மழை பெய்து வருவதால் நீர் ஏந்து பகுதியில் அமைந்துள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளன.

கென்யோன் புரோட்லேன்ட் லக்சபான பொல்பிட்டிய நவலக்சபான கலுகல விமலசுரேந்திர மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் வான் கதவுகள் வழியாக வெளியேறுகிறது

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியதால் எந்த நேரத்திலும் நீர் தானாகவே வெளியேறும் வாய்ப்பு உள்ளது

மேலும் மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட இன்னும் 4 அடி நிறைய வேண்டிய நிலையில் உள்ளது.

தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயி@ரிழப்பு : மேலும் ஒருவர் காயம்

அனுராதபுரம் – நம்படகஸ்வேவ பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மழை காரணமாக, வயல் பகுதியில்…

76 0 0
இலங்கை செய்திகள்

தராதரம், பதவி அல்லது அதிகாரம் போன்றவற்றிற்காக சட்டத்தை வளைக்காமல் அனைவருக்கும் சமமான நீதி வழங்கப்பட வேண்டும்!

உயர் நீதிமன்றத்தினால் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கத்தால் செயற்பட முடியாது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை…

93 0 0
இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நவராத்திரி விழா

இலங்கைப் பாராளுமன்றத்தில் 2026ம் ஆண்டுக்கான நவராத்திரி விழா சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்ற உத்தியோகஸ்தர்களின் ஏற்பாட்டில்இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினரால் நடாத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மத…

81 0 0
இலங்கை செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் உயி@ரிழந்த 15 வயது மாணவி!

இன்றையதினம் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவமானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது திருகோணமலை – தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த நபீர் பாத்திமா…

144 0 0