ஹட்டன் பேருந்து நிலைய கழிவறை தொடர்பில் நகர சபைத் தலைவர் நேரில் ஆய்வு
ஹட்டன் பஸ் நிலைய பொது கழிவறையால் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, அந்த இடத்தில் இன்று (20) விசேட ஆய்வுகளை ஹட்டன் நகர சபை தலைவர் அசோக கருணாரத்ன அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
ஹட்டன்–டிக்கோயா நகர சபையின் தலைவர் அசோக கருணாரத்ன, கினிகத்தேனை சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் பந்துல ஹேரத், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், நகர சபை அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
கழிவறை பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் இன்று உறுதியளித்தனர்.



