உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வர்த்தகர் ஒருவரை கொ**லை செய்யத் திட்டமிட்டிருந்த நபர் கைது.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
107 பார்வைகள்

அங்குருவாதொட்டை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரை கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நபர் ஒருவர், டி-56 ரக துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ‘வெல்லே சாரங்க’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் நெறிப்படுத்தலின் கீழ் குறித்த கொலைச் சம்பவம் திட்டமிடப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்குருவாதொட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் வர்த்தகரை கொலை செய்யத் தயாராகி வருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பல நாட்களாக பொலிஸார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் பலனாக சந்தேக நபர் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து,
அவரது வீட்டின் அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த டி-56 ரக துப்பாக்கி, ஒரு மெகசின் மற்றும் 16 தோட்டாக்களும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்தக் கொலைத் திட்டத்துக்குக் காரணம், குறித்த வர்த்தகர் தனது தொழிற்சாலையின் கழிவுப் பொருட்களை வெல்லே சாரங்க தரப்புக்கு வழங்க மறுத்தமையே என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட இந்தத் துப்பாக்கியானது களுத்துறைப் பிரதேசத்தில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுக்கு நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ‘பஸ் லலியா’ என்ற லலித் கண்ணங்கரவின் தரப்பினராலும் இது பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேக நபரைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

131 0 0