அராலி வீதியை சீர் செய்த நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர்.!
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர், குடிநீர் வழங்கல் குழாயினை புதைப்பதற்கு வீதியை கிளறியதால் அந்த வீதியானது சேதமடைந்த வண்ணம் காணப்பட்டது. பின்னர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் அது சீர் செய்யப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
அராலி மத்தி சமுர்த்தி வங்கியில் இருந்து செந்தமிழ் கிராமத்துக்கு செல்லுகின்ற வீதியில், குடிநீர் வழங்கல் குழாயை புதைப்பதற்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் வீதியானது குறுக்காக கிளறப்பட்டது. இருப்பினும் அந்த வீதியானது திருத்தம் செய்யப்படவில்லை.
இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதனை தொடர்ந்து அந்த வீதியானது நேற்றையதினம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் சீர் செய்யப்பட்டது.



