உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
21 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கடலடி இணைய கேபிள்கள் இலக்கு: ஈரான் எச்சரிக்கை!

உலக செய்திகள் 15 மணி நேரம் முன்
93 பார்வைகள்

ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கடலடி இணையக் கேபிள்கள், சாத்தியமான இராணுவ மோதல்களின் போது இலக்குகளாக மாறக்கூடும் என ஈரான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் பிரதிநிதி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் போர் ஏற்படுவதற்கான சாத்தியத்தை நிராகரிக்கவில்லை. இம்முறை எங்களின் பதிலடி மிகக் கடுமையானதாக இருக்கும். அமெரிக்கா கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன், உலகம் பாரிய சக்திவள நெருக்கடியைச் சந்திக்கும்” என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், எதிர்காலப் போரில் ஈரான் பல்வேறு வகையான ஆயுத அமைப்புகளைப் பயன்படுத்தக்கூடும் என்றும், புதிய இலக்குகளை அடையாளம் காணக்கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்.

“உலகளாவிய இணையம் மற்றும் வணிகத் தரவுப் பரிமாற்றங்கள் தங்கியுள்ள 7 முக்கிய கடலடி கேபிள்கள் ஹோர்முஸ் நீரிணை வழியே செல்கின்றன. இதனை நாங்கள் எதிர் தரப்பினருக்கு நினைவூட்டுகிறோம்” என்றும் அந்தப் பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்தியத்தில் இராணுவப் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையிலேயே இத்தகைய எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

பிரான்ஸை உலுக்கிவரும் கலவரங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று குற்றம் சாட்டினார். மேலும்,…

88 0 0
உலக செய்திகள்

ஈரானுக்கும் பிரேசிலுக்கும் இடையே பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைக் குறைப்பதற்கான ராஜதந்திர நகர்வுகள் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) மற்றும் பிரேசில்…

76 0 0
உலக செய்திகள்

வலிமைமிக்க நாடான இந்தியாவுடன் இஸ்ரேலுக்கு நல்லுறவு உள்ளது – நெதன்யாகு கருத்து

சர்வதேச அளவில் இஸ்ரேல் தனித்து விடப்படவில்லை என்றும், வலிமைமிக்க நாடான இந்தியாவுடன் சிறப்பான நல்லுறவு பேணப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தலைநகர்…

83 0 0
உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகுவுக்கு முழு ஆதரவு: ட்ரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேலில் எதிர்வரும் ஒக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வெற்றி பெற எனது முழு ஆதரவும் உண்டு என…

89 0 0