குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்ப்பு.!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்டத்தில் 49 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை நேற்று 19 திகதி நள்ளிரவு தனக்கு தானே தூக்கிட்டு தற்கொ*லை செய்து கொண்டார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற மஸ்கெலியா பொலிசார் தங்களது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை செய்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஷ்பகுமார தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


