உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
21 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஈரானுக்கும் பிரேசிலுக்கும் இடையே பேச்சுவார்த்தை!

உலக செய்திகள் 17 மணி நேரம் முன்
77 பார்வைகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைக் குறைப்பதற்கான ராஜதந்திர நகர்வுகள் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) மற்றும் பிரேசில் வெளியுறவு அமைச்சர் மௌரோ வீரா (Mauro Vieira) ஆகியோர் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய வெளியுறவு அமைச்சரின் டெலிகிராம் பக்கத்தின் தகவலின்படி, இந்தக் கலந்துரையாடலின் போது மத்திய கிழக்கில் “பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை” உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு நாட்டு அமைச்சர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

தெஹ்ரானில் ராஜதந்திர நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவும் (Sergey Lavrov), பாகிஸ்தான் இராணுவத் தளபதியும் கடந்த நாட்களில் தெஹ்ரானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

போரை மீண்டும் தொடங்குவது குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அமெரிக்காவிற்கு ஈரானின் தலைமையும், இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) உயர் அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ள பின்னணியில் இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கடலடி இணைய கேபிள்கள் இலக்கு: ஈரான் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கடலடி இணையக் கேபிள்கள், சாத்தியமான இராணுவ மோதல்களின் போது இலக்குகளாக மாறக்கூடும் என ஈரான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் இஸ்லாமிய…

93 0 0
உலக செய்திகள்

விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

பிரான்ஸை உலுக்கிவரும் கலவரங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று குற்றம் சாட்டினார். மேலும்,…

88 0 0
உலக செய்திகள்

வலிமைமிக்க நாடான இந்தியாவுடன் இஸ்ரேலுக்கு நல்லுறவு உள்ளது – நெதன்யாகு கருத்து

சர்வதேச அளவில் இஸ்ரேல் தனித்து விடப்படவில்லை என்றும், வலிமைமிக்க நாடான இந்தியாவுடன் சிறப்பான நல்லுறவு பேணப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தலைநகர்…

83 0 0
உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகுவுக்கு முழு ஆதரவு: ட்ரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேலில் எதிர்வரும் ஒக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வெற்றி பெற எனது முழு ஆதரவும் உண்டு என…

89 0 0