உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்காவில் 205ஆவது வருடாந்த கொடியேற்றத் திருவிழா.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
127 பார்வைகள்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்கா ஷரீஃபில், அஸ்-ஸையித் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் அவர்களின் நினைவாக நடாத்தப்படும் 2026 ஆம் ஆண்டிற்கான 205ஆவது வருடாந்த கொடியேற்றத் திருவிழா வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெகுவிமர்சையாக ஆரம்பமாகவுள்ளது.

இப் புனிதம் மிக்க கொடியேற்ற பெருவிழாவானது 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி, தொடர்ந்து 12 நாட்கள் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளுடன் நடைபெற்று 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடையும்.

நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்களும் பக்தர்களும் வருகை தரும் இக் கொடியேற்றத் திருவிழாவானது, யாத்திரை ஆணைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, 1963 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதிய 13529 ஆம் இலக்க இலங்கை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாகவும் உத்தியோகபூர்வமாக ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் வருடாந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொடியேற்ற விழாவை முன்னிட்டு வருகை தரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பிராந்திய அரச நிறுவனங்கள், கல்முனை மாநகர சபை மற்றும் பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து தர்கா நிர்வாக சபையினர் விரிவாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

131 0 0