உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஊழல் தடுப்புச் சட்ட திருத்தச் சட்டமூலத்துக்கு சபாநாயகர் கையொப்பமிட்டு சான்றளிப்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
112 பார்வைகள்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, ஊழல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலத்துக்கான சான்றிதழை நேற்று வழங்கினார்.

இந்தச் சட்டமூலம், பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமானவரால் கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இந்த மாதம் 8ஆம் திகதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அடையாளம் காணப்பட்ட சட்ட ரீதியான, விளக்கமளித்தல் சார்ந்த, நிர்வாக ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே இந்தத் திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பிரதிகளுக்கு இடையில் காணப்படும் முரண்பாடுகளைச் சீர்செய்தல், ஊழல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரலின்போது எதிர்கொள்ளப்படும் சவால்களுக்குத் தீர்வு காணுதல் ஆகியவையும் இதன் நோக்கங்களாகும்.

அத்துடன், இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் நிர்வாகச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை மையப்படுத்தப்பட்ட மின்னணு முறைமையின் ஊடாகச் சமர்ப்பிக்கும் நடைமுறையை எளிமைப்படுத்துவதற்கும் இந்தத் திருத்தங்கள் வழிவகுக்கும்.

இந்தத் திருத்தங்கள், இலங்கையில் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான தற்போதைய சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், ஊழல் தடுப்புச் சட்டத்தை வினைத்திறனுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக்கூறலுடனும் நடைமுறைப்படுத்துவதற்கும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஊழல் தடுப்புச் (திருத்தச்) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க ஊழல் தடுப்புச் (திருத்தச்) சட்டமாக சட்டமாக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

131 0 0