உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஞானசார தேரருக்கு மீண்டும் மன்னிப்பு வழங்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
110 பார்வைகள்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பில் நடைமுறை சார்ந்த தவறுகள் ஏதேனும் இருப்பின், அவற்றைச் சரி செய்து அவருக்கு மீண்டும் முழுமையான மன்னிப்பை வழங்குவதற்கான அனைத்து அதிகாரமும் தற்போதைய ஜனாதிபதிக்கே உள்ளது என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

மக்களுக்கான கூட்டு எதிர்க்கட்சி, கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டின் மகாநாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைவாகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். அனைத்து விடயங்களையும் பரிசீலித்தே அவர் அந்த முடிவை எடுத்தார். எனினும், தற்போதைய அரசு அந்த முடிவில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாகக் கூறி, அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளது.

பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கலானது ஜனாதிபதி செயலகத்தால் இடம்பெற்ற தொழில்நுட்பத் தவறேயன்றி, மைத்திரிபால சிறிசேனவின் தவறல்ல. இவ்வாறானதொரு நிர்வாகத் தவறுக்காகப் மன்னிப்புப் பெற்ற நபரைக் குற்றவாளியாக்க முடியாது. ஏனெனில், அந்த நடைமுறையின் மீது அவருக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கவில்லை.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் உட்பட மகா சங்கத்தினரின் கோரிக்கை இன்னமும் மாற்றமின்றி அப்படியே உள்ளது. எனவே, நடைமுறை சார்ந்த தவறுகளை நிவர்த்தி செய்து, ஞானசார தேரருக்கு மீண்டும் முழுமையான ஜனாதிபதி மன்னிப்பைத் தற்போதைய ஜனாதிபதி வழங்க வேண்டும் என்பதே எமது தெளிவான நிலைப்பாடாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

132 0 0