உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
21 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வலிமைமிக்க நாடான இந்தியாவுடன் இஸ்ரேலுக்கு நல்லுறவு உள்ளது – நெதன்யாகு கருத்து

உலக செய்திகள் 19 மணி நேரம் முன்
84 பார்வைகள்

சர்வதேச அளவில் இஸ்ரேல் தனித்து விடப்படவில்லை என்றும், வலிமைமிக்க நாடான இந்தியாவுடன் சிறப்பான நல்லுறவு பேணப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் நடைபெற்ற அரச விழாவில் பாதுகாப்பு கோட்பாடு குறித்த அறிக்கையை வெளியிட்டுப் பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், அந்தக் காலக்கட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி இஸ்ரேலை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என நெதன்யாகு தெரிவித்தார்.

பிற நாடுகளுடன் புதிய கூட்டணிகளை ஏற்படுத்தி, மற்ற நாடுகள் மதிக்கும் அளவுக்கு நாட்டின் பலத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இந்தியா எந்த வகையிலும் சிறிய நாடு அல்ல எனக் குறிப்பிட்ட அவர், உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடான இந்தியாவுடன் இஸ்ரேலுக்குச் சிறப்பு வாய்ந்த நல்லுறவு உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்திய மக்களின் மனதில் இஸ்ரேல் மீது தனி அன்பு உள்ளதாகவும், இதனால் சர்வதேச அரங்கில் இஸ்ரேல் தனித்து விடப்படவில்லை என்பதை இதன் மூலம் தாம் உணர்வதாகவும் நெதன்யாகு பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கடலடி இணைய கேபிள்கள் இலக்கு: ஈரான் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கடலடி இணையக் கேபிள்கள், சாத்தியமான இராணுவ மோதல்களின் போது இலக்குகளாக மாறக்கூடும் என ஈரான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் இஸ்லாமிய…

93 0 0
உலக செய்திகள்

விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

பிரான்ஸை உலுக்கிவரும் கலவரங்களுக்கும் போராட்டங்களுக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று குற்றம் சாட்டினார். மேலும்,…

88 0 0
உலக செய்திகள்

ஈரானுக்கும் பிரேசிலுக்கும் இடையே பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைக் குறைப்பதற்கான ராஜதந்திர நகர்வுகள் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) மற்றும் பிரேசில்…

77 0 0
உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகுவுக்கு முழு ஆதரவு: ட்ரம்ப் அறிவிப்பு!

இஸ்ரேலில் எதிர்வரும் ஒக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் வெற்றி பெற எனது முழு ஆதரவும் உண்டு என…

89 0 0