உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் புதுக்கமம் கிராம மக்கள் தமக்கு குடிநீர் இணைப்பு வழங்குமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
126 பார்வைகள்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புதுக்கமம் கிராம மக்கள் தமது கிராமத்திற்கு குடிநீர் இணைப்பு மற்றும் நீர் விநியோகத்தை வழங்க கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை (19) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

மன்னார் உயிலங்குளம் புதுக்கமம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (19) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் யை சந்தித்து தமது கிராமத்தின் அவல நிலையை அரச அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு, தமது கிராமத்திற்கு உடனடியாக குடி நீரை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் குறிப்பாக புதுக்கமம் கிராமத்தில் சுமார் 130 குடும்பங்கள் வரை வசித்து வருகின்ற நிலையில்,நாளாந்தம் குடி நீரை பெற்றுக் கொள்வதில் குறிப்பாக சுத்தமான குடி நீரை பெற்றுக் கொள்வதில் இக்கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

பாரிய பிரச்சினைகளுக்கும் அக்கிராம மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.

குடிநீர் பிரச்சினை தொடர்பாக இரு தடவைகள் மன்னார் பிரதேச செயலகத்திற்கு கடிதங்களை கை அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பிரதான குழாய் நீர் உள்ள இடத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் தமது கிராமம் உள்ளதாகவும், உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தமது கிராமத்திற்கு குடிநீர் இணைப்பு மற்றும் குடி நீரை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கமம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் உள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பாக அக்கிராம மக்கள் புதுக்கமம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பிரதி நிதிகள் ஊடாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் லூக்கஸ் சோபனா அலெக்சாண்டர் அவர்களிடம் கோரிக்கை முன் வைத்த நிலையில் பிரதேச சபை உறுப்பினர் ஊடாக இன்றைய தினம் திங்கட்கிழமை (19) புதுக்கமம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து தமது கிராம பிரச்சினைகள் மற்றும் குடிநீர் பிரச்சினையை முன்வைத்து மகஜர் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

132 0 0