உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சேவையில் ஈடுபடாத பேருந்து; பயணிகள் அவதி.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
111 பார்வைகள்

மஸ்கெலியா நகரில் இருந்து அதிகாலை நான்கு மணிக்கு தலைநகர் கொழும்பு கொழும்பு செல்லும் அவிசாவலை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்து சேவைகள் கடந்த சில மாதங்களாக சேவையில் இல்லாத காரணத்தால் மஸ்கெலியா, நல்லதண்ணி, சாமிமலை பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாரிய இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மேலும் அதிகாலை வேளையில் ஹட்டன் நகரில் இருந்து ஹட்டன் அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான காலை 6 மணிக்கு சாமிமலை நோக்கி சென்று காலை 8 மணிக்கு சாமிலை நகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து சேவைகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அரச பேருந்து சேவைகள் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் அதிகாலை வேளையில் தங்களது கடமைகளுக்கு அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தலைநகர் கொழும்பு செல்லும் பயணிகள் மற்றும் அரச சேவைக்காக செல்ல வேண்டிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பேருந்து இயந்திரம் முழுமையாக செயல் இழந்து உள்ளது. அந்த நிலையில் அந்த பேருந்துக்கு புதிய இயந்திரம் பொருத்த வேண்டும். ஆகையால் இன்னும் சில காலம் அந்த பேருந்தை சேவையில் ஈடுபடுத்த முடியாது எனவும் எமது பேருந்து நிலையத்தில் 103 சாலையில் 70 பேருந்துகள் மட்டுமே தற்போது சேவையில் ஈடுபடுத்த முடியும் ஏனைய 33 சேவைகள் பாரிய பின்னடைவை சந்தித்து உள்ளது.

காரணம் எமது பேருந்து நிலையத்திற்கு புதிய பேருந்துகள் குறைந்த பட்சம் 30 தேவை. தற்போது உள்ள அனைத்து பேருந்துகளும் மிகவும் பழமையானது. நாளாந்தம் பேருந்துகளை திருத்தம் செய்து கொண்டு தான் 70 சேவைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

மேலும் அவிசாவலை அரச பேருந்து நிலைய பொறுப்பதிகாரியிடம் மஸ்கெலியா நகரில் இருந்து அதிகாலை வேளையில் செல்லும் பேருந்து பற்றி கேட்டபோது அவர், சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பேருந்து சீர்திருத்த வேண்டிய நிலையில் உள்ளது அதற்கு குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும். எம்மிடம் சேவையில் ஈடுபடுத்த மேலதிக பேருந்து இல்லை. எமது பேருந்து சேவைகள் முறையாக செயல்பட புதிய பேருந்து 80 தேவை. எம்மிடம் உள்ள பேருந்துகளை கொண்டு தற்போது எம்மால் முடிந்த அளவு மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் அரச பேருந்து சேவைகள் முறையாக இல்லாத நிலையில் ஹட்டன் – நுவரெலியா தனியார் சொகுசு பேருந்து சேவைகள் எனக் கூறி 26 பேர் பயணம் செய்யும் பேருந்துகளில் ஐம்பது அல்லது நாற்பது பயணிகளை ஏற்றிக்கொண்டு ரதல்ல குறுக்கு வழியில் செல்லும் போது ஏதேனும் ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பயணிகளின் உயிருக்கு யார் உத்தரவாதம்.

சொகுசு பேருந்து சேவைகள் என கூறி 350/= ரூபாய் கட்டணம் செலுத்தி அதிகளவான பயணிகளை ஏற்றிச் செல்வதுடன் குளிரூட்டப்பட்ட சேவைகள் என்ற அடிப்படையில் அதிக கட்டணம் செலுத்தி செல்லும் பயணிகள் பாரிய அளவில் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இது குறித்து மத்திய மாகாண தனியார் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தோடு ஹட்டன், பத்தனை, தலவாக்கலை, லிந்துல்ல, நானுஓயா மற்றும் நுவரெலியா போக்குவரத்து பொலிசார் அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றிக்கொண்டு செல்லும் ஹட்டன் நுவரெலியா சொகுசு பேருந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் மஸ்கெலியா நகரில் இருந்து தனியார் பேருந்து சேவைகள் தலைநகர் கொழும்பு நோக்கியும் சாமிமலை நகரில் இருந்து அதிகாலை வேளையில் தலைநகர் கொழும்பு நோக்கியும் ஆரம்பிக்க வேண்டும். அத்துடன் ஹட்டன் நுவரெலியாவிற்கு மெட்ரோ பேருந்து சேவைகள் அடிக்கடி இடம்பெற போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

149 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

139 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

132 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

132 0 0