உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
19 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அல்லைப்பிட்டியில் கோர விபத்து; பெண் ஒருவர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
78 பார்வைகள்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை முற்பகல் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நண்டு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன், அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் “லீடர் அஷ்ரஃப் கிண்ண” கிரிக்கெட் சுற்றுப் போட்டி குறித்து விசேட கலந்துரையாடல்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சாய்ந்தமருது பிராந்திய…

76 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் அத்துமீறிய விவசாயிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக  பண்ணையாளர்கள்  குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் அத்துமீறிய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதனால் தாங்கள் இன்று நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை கால்நடை…

81 0 0
இலங்கை செய்திகள்

காட்டின் ராஜாவை, இறுதியாக அந்த மகா வனமே தனது இதயத்தோடு தழுவிக் கொண்டது!

இலங்கையின் வரலாறு, சமயம், கலை மற்றும் மக்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய கம்பீர குறியீடாகத் திகழ்ந்த “காவன்திஸ்ஸ” (Dwirada Gaja Kavantissa) எனும் யானையின் மறைவையொட்டி, முன்னாள்…

79 0 0
இலங்கை செய்திகள்

மகா சங்கத்தினரிடம் மன்னிப்புக் கோரினார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர், தமது பதவிக் காலத்தில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில்…

72 0 0