உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
20 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு; சோமரத்னவிடம் வாக்குமூலம் பெற அனுமதி.!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
83 பார்வைகள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு தலைமை தாங்கும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனில் குமார் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அந்த அறிக்கையை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் ஏனைய உரிய தரப்பினருக்கும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்விசாரணைகளின் போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இரண்டு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

C-14 கார்பன் பரிசோதனைக்கான மாதிரிகளை மிக விரைவாக அனுப்புவது தொடர்பாகவும், செம்மணி புதைக்குழி சம்பவத்துடன் தொடர்புடைய, ஏற்கனவே சிறைச்சாலையில் உள்ள லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இவற்றில், செம்மணி புதைகுழி வழக்குடன் தொடர்புடைய லான்ஸ் கோப்ரல் சோமரத்தின ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அதேவேளை, C-14 பரிசோதனை மாதிரிகளை அனுப்புவது தொடர்பில் எதிர்வரும் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாகக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி வீ. நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், மனித எலும்புகள் பரிசோதனை தொடர்பான நிபுணர் குழுவின் விபரங்கள் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் பின்னரே மேலதிக ஆய்வுகள் தொடங்கும் என்றும் சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அறியத்தரப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வழக்கு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகக் குழுக் கூட்டத்தின் முடிவுகளை ஆராய்வதற்காக இவ்வழக்கு எதிர்வரும் மாதம் 19 ஆம் திகதி பிற்பகல் 2:30க்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் “லீடர் அஷ்ரஃப் கிண்ண” கிரிக்கெட் சுற்றுப் போட்டி குறித்து விசேட கலந்துரையாடல்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “லீடர் அஷ்ரஃப் கிண்ணம்” மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சாய்ந்தமருது பிராந்திய…

76 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் அத்துமீறிய விவசாயிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக  பண்ணையாளர்கள்  குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்ட அதிகாரிகள் அத்துமீறிய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தமது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதனால் தாங்கள் இன்று நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை கால்நடை…

81 0 0
இலங்கை செய்திகள்

காட்டின் ராஜாவை, இறுதியாக அந்த மகா வனமே தனது இதயத்தோடு தழுவிக் கொண்டது!

இலங்கையின் வரலாறு, சமயம், கலை மற்றும் மக்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய கம்பீர குறியீடாகத் திகழ்ந்த “காவன்திஸ்ஸ” (Dwirada Gaja Kavantissa) எனும் யானையின் மறைவையொட்டி, முன்னாள்…

81 0 0
இலங்கை செய்திகள்

மகா சங்கத்தினரிடம் மன்னிப்புக் கோரினார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர், தமது பதவிக் காலத்தில் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில்…

74 0 0