உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
19 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரபல பாலிவுட் நடிகரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளை பிடிக்க 15 குழுக்கள் அமைப்பு

இந்திய செய்திகள் 12 மணி நேரம் முன்
75 பார்வைகள்

பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து மும்பையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் ஜூஹூவில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் டைகர் ஷெராஃபின் ஓட்டுநர் ஃபிர்தோஷ் மற்றும் அங்கிருந்த மற்றொரு நபர் பலத்த காயமடைந்தனர்.

ஆரம்பக்கட்ட தகவலின் படி, டைகர் ஷெராஃப் இந்த தாக்குதலில் எந்தவொரு காயமும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது ஓட்டுநர் பிர்தோஷின் இடது கையில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைகர் ஷெராஃபை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

மேலும் இந்த கும்பல் சமீபத்தில் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டைகர் ஷெராஃபை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த 15 தனிப்படை குழுக்களை அமைத்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை ஆணையரிடம் முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

நடிகர் சல்மான் கானின் இல்லத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!

ஜுஹு பகுதியில் நேற்று (18) மாலை நடிகர் டைகர் ஷெராஃபின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, மும்பையின் பாந்த்ரா பகுதியில்…

87 0 0
இந்திய செய்திகள்

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய வானூர்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 24 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பஹல்காம் பயங்கரவாத…

64 0 0
இந்திய செய்திகள்

மழை வேண்டி பக்தர்களுடன் மண் சோறு சாப்பிட்ட த.வெ.க. எம்.எல்.ஏ.!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நீர்நிலைகள் வற்றி, நிலத்தடி…

102 0 0
இந்திய செய்திகள்

மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என எச்சரித்தேன்! : திருமாவளவன் ஆதங்கம்!!

தேர்தலில், மு.க. ஸ்டாலின் குறிவைக்கப்பட்டிருக்கிறார் என்று சேகர்பாபுவிடம் அப்போதே சொன்னேன் என தொல். திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான…

109 0 0