உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள்; உதவிக்கரம் நீட்டிய வாகன சாரதி.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
115 பார்வைகள்

நானுஓயா ரதல்ல கார்லிபேக் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹட்டன் நுவரெலியா ரதல்ல குறுக்கு வீதியின் இருந்து கார்லிபேக் வரையான வீதி தடைப்பட்டுள்ளது.

இன்று (19) ஏற்பட்ட இந்த நிலையால், பாடசாலை செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்திற்கொண்டு பாரவூர்தி மற்றும் முச்சக்கரவண்டி வாகனங்களை பயன்படுத்தி அவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே, கார்லிபேக் பகுதியில் கடும் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடம் வரை வாகன பயணிக்க முடியாத நிலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடும் மழை பெய்து வரும் நிலையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடியாக இதற்கு உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

150 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

140 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

133 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

132 0 0