உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வரலாற்றில் முதல் முறையாக 12 மணிநேரம் மின் துண்டிப்பு; இது இந்த அரசின் இயலாமையின் வெளிப்பாடு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
133 பார்வைகள்

மின்சாரக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசு நிறைவேற்றத் தவறியதாலேயே நாடுபூராகவும் மின்துண்டிப்பு ஏற்பட்டது என்றும், இது அரசின் முழுமையான இயலாமையைக் காட்டுகின்றது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

களுத்துறையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டின் வரலாற்றில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 12 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டது இதுவே முதல் தடவையாகும். கடந்த சனிக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் ஏற்பட்ட மின்தடையானது, கட்டம் கட்டமாகச் சீரமைக்கப்பட்டு இரவு 10.45 மணியளவிலேயே நாடுபூராகவும் வழமைக்குத் திரும்பியது.

கடந்த வருடம் பெப்ரவரி 9ஆம் திகதியும் இவ்வாறானதொரு திடீர் மின்துண்டிப்பு ஏற்பட்ட போது, பாணந்துறைப் பகுதியில் குரங்கு ஒன்று பாய்ந்ததால்தான் மின்தடை ஏற்பட்டது என்று அப்போதைய அமைச்சர் பொய் கூறினார். பின்னர் அமைச்சு மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடத்திய விசாரணைகளில் அது தொழில்நுட்பக் கோளாறு என்பது உறுதியானதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டிய உத்திகள் குறித்தும் பரிந்துரைக்கப்பட்டன. எனினும், அந்த அறிக்கைகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறியதாலேயே தற்போது மீண்டும் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.” – என்றார்.

தமது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சூரிய மின்சக்தித் திட்டம் மூலமே தற்போது மின்சாரக் கட்டமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், நீர் மற்றும் நிலக்கரி மின் உற்பத்திக்கு இணையாகச் சூரிய சக்தியூடாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் அவர் கூறுகையில்,
“நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று இயந்திரங்களும் தற்போது செயலிழந்துள்ள நிலையில், அவற்றைச் சீரமைக்கும் வரை அதிக விலை கொடுத்து டீசல் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. மாற்று ஆற்றல் மூலங்கள் மூலம் மின்சாரத்தைத் தயாரித்து மக்களுக்கு மலிவான விலையில் வழங்கத் தவறிய அரசு, கட்டமைப்பை மறுசீரமைப்பதிலும் தோல்வியடைந்துள்ளது. தனியார் துறையுடன் இணைந்து மின் பரிமாற்றத்தில் எத்தகைய முதலீடுகளையும் அரசு மேற்கொள்ளவில்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

150 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

140 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

133 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

132 0 0