உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
100 பார்வைகள்

அரசு என்ற வகையில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றோம் என்றும், தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார்.

பதுளை நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“அரசைப் பொறுப்பேற்கும் போது எமக்கு நிர்வாக அனுபவம் இருக்கவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும், நாம் தனித்துச் செயற்படவில்லை. கொள்கைப்பூர்வமான ஓர் அரசியல் இயக்கமாக, சட்டத்துக்கு உட்பட்டு வலுவாகச் செயற்படுகின்றோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவொரு அமைச்சரும் தனிச்சையாக முடிவெடுக்கவில்லை. கூட்டாக முடிவெடுத்து, குறைகளைத் திருத்திக்கொண்டு மக்களுக்குச் சேவை செய்ய அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றோம். நாட்டின் ஐந்தாண்டு ஆட்சிக் காலம் நிறைவடையும் போது, உலகிலேயே மிகச் சிறந்த முன்மாதிரி நாடாக இலங்கையை மாற்றுவோம்.” – என்றார்.

அரசு முன்னெடுத்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் குறித்துத் தொடர்ந்து விளக்கிய அமைச்சர்,

‘பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 14 இலட்சம் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மூன்று கட்டங்களாக உயர்த்தப்பட்டு வருகின்றது.

16 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக மாணவர்களுக்கான ‘மஹாபொல’ கொடுப்பனவு 5 ஆயிரம் ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபாவாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுக்கான ஒதுக்கீடு 100 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர் சேவையில் 23 ஆயிரம் பேர் உட்பட ஒட்டுமொத்த அரச சேவையில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் புதிதாக இணைக்கப்பட்டு வருகின்றனர்.

நன்னடத்தை பராமரிப்பிலுள்ள பிள்ளைகள் 18 வயதைப் பூர்த்தி செய்து சமூகத்தில் இணையும் வரை, அவர்களது கணக்கில் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வைப்பிலிடப்படுவதுடன், 18 வயதுக்குப் பின் அவர்களுக்குத் தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு உதவித்திட்டமும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரப் பலன்களைச் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அனுபவித்து வந்த நிலையை மாற்றி, தற்சமயம் சாமானியப் பொதுமக்களுக்கும் உழைக்கும் பெண்களுக்கும் அப்பலன்கள் சென்றடைவதை அரசு உறுதி செய்துள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

150 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

140 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

133 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

132 0 0