உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 19.10.2026

ராசி பலன்கள் 3 நாட்கள் முன்
80 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். மன நிம்மதி கிடைக்கும். வீட்டில் இறை வழிபாடு செய்வது சந்தோஷத்தை இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுடைய முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். பெற்றவர்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான முன்னேற்றம் காணப்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனம் அமைதியாக இருக்கும். நிம்மதியாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் இறை வழிபாடு செய்வது மன சந்தோஷம் தரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் சந்தோஷம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை சுப செலவை ஏற்படுத்தும். ஆயுத பூஜை வழிபாடு மனநிறைவை கொடுக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவலை வேண்டாம். பெரிய பாதிப்புகள் இல்லை. இறை நம்பிக்கை வையுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். முன்கோபம் வேண்டாம். வார்த்தையில் கவனம் இருக்கட்டும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் பதற்றம் இருக்கும். தேவையில்லாத டென்ஷன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். புதிய முதலீட்டில் கவனம் தேவை. வண்டி வாகனம் ஓட்டும் போது நிதானம் அவசியம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கும் நாள். வருமானம் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். நீண்ட நாள் பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வரும். எதிரி தொல்லை நீங்கும். நல்லது நடக்கும். இறை வழிபாடு குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு இன்று முன்னேற்றம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். தேவை இல்லாத மன சஞ்சலம் நீங்கும். மனம் தெளிவு பெறும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகி, மருத்துவ செலவு குறையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத ஒரு பொருள், உங்கள் மனதிற்கு பிடித்த ஒரு பொருள், உங்கள் கையை வந்து சேர வாய்ப்பு உள்ளது. இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். பெரியவர்களுடைய ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். சுபசெலவுகள் ஏற்படும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். புது முயற்சிகள் வெற்றி தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நன்மை தரும். உற்சாகத்திற்கு குறைவிருக்காது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். சுறுசுறுப்பு இரட்டிப்பாகும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலைப்பளு அதிகம் இருக்கும். இருந்தாலும் இறை வழிபாட்டில் மனம் திருப்தி அடையும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வரவு அதிகரிக்கும். வராத கடன் வசூல் ஆகும். தேவைகள் பூர்த்தியாகும். சில பேருக்கு பொன் பொருள் சேர்க்கையும் உண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தைகள் நடக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத் துணை அமைய நல்ல நேரம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் கடமைகளை சரிவர செய்வீர்கள். பூஜை புனஸ்காரங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று ஆயுத பூஜை வழிபாடு மனதிற்கு நிறைவே கொடுக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தால் நன்மை உண்டு.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 22.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கௌரவமான நாளாக இருக்கும். எந்த இடத்தில் தலை குனிந்து நின்றீர்களோ, அந்த இடத்தில் தலை நிமிர்ந்து உங்களுடைய திறமையை நிலை நாட்டுவீர்கள். உங்கள்…

87 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 21.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். மகிழ்ச்சியில் ஒரு கிலோ எடை கூடுவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.…

76 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 20.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும். பெயர், புகழ், பாராட்டு கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் எதிர்காலத்தில் பெரிய வெற்றியை கொடுக்கும். இறைவனின் பரிபூரண அருள்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். பெருமாள் வழிபாடு மனதிற்கு அமைதி தரும். கடன் சுமை…

102 0 0